தெறிக்கவிடும் PUBG-யின் புதிய அப்டேட்..! அப்படி என்ன இருக்கு ?

share on:
Classic

தொழில்நுட்ப உலகில் சிறியவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு, காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு கையில் மொபைல் போனை பிடித்து  "சூடு டா ஓடு டா" என பேசிக்கொண்டு உலகின் வெவ்வேறு இடங்களில் உள்ள 100 பேர் விளையாடும் போர் விளையாட்டு தான் இந்த PUBG (Player Unknown’s Battleground)

PUBG வரலாறு: 

PUBG (Player Unknown’s Battleground)  பிரெண்டன் க்ரீன் தான் இந்த விளையாட்டின் டெவலப்பர் .  சிறிய வயதில் இருந்தே எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத ஒரு மிடில் பென்ச் கேரக்டர்.போட்டோகிராஃபில் ஆர்வம் கொண்ட இவர் படிப்பை முடித்து ஒரு கம்பெனியில் போட்டோ கிராஃபராக பணிபுரிந்தார்.

வீடியோ கேமிற்கு அடிமையான இவருக்கு அதே வீடியோ கேமினால் அவருடைய காதல் மனைவி விவாகரத்து வாங்கி பிரிந்து சென்றார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான பிரெண்டன் க்ரீன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாததாள் இவரை வேலையில் இருந்து நீக்கி விடுகின்றனர்.

இதனால் மன அழுத்தத்தின் உச்சிக்கு சென்ற கேம் பிரியரான பிரெண்டன் மன அழுத்தத்தில் இருந்து வெளி வர தானே எப்படி ஒரு கேமை உருவாக்க வேண்டும் என்று கற்று கேமை உருவாக்கும் விதத்தை கற்று கொள்கிறார் சிறிய சிறிய கேமை உருவாக்கிய இவரின் திறமையை பார்த்து தென் கொரியாவை சேர்ந்த ப்லுஹோல்(BLUEHOLE) விளையாட்டு கம்பெனியை சேர்ந்த கிம் என்பவர் ப்ரெண்டனுடன் இணைந்து ஒரு கேமை உருவாக்க திட்டமிடுகிறார்.

பின்னர்,பிரெண்டன் க்ரீன் தலைமையில்  35 கம்ப்யூட்டர் டெவலப்பெர்களை கொண்டு ஒரு டிசைனராகவோ, ஒரு டெவ்லபேரா இல்லாமல் சாதாரண கேம் விளையாட கூடியவர்களின் நிலையில் இருந்து உருவாக்கிய கேம் தான் இந்த PUBG (Public Unknown Battle Ground).
 

இதுவரை வந்துள்ள PUBG அப்டேட்ஸ் : 

உலகின் பருவ மாற்றத்தை போல PUBG விளையாட்டிலும் சீசனுக்கு ஒரு அப்டேட் வெளியாகிறது. எராங்கள் மற்றும் மிராமர் மேப்புடன் சான்ஹோக் எனும் புதிய மேப் மற்றும் Bullet proof வாகனங்கள்,QBZ ,Flare Gun போன்ற துப்பாக்கி என கலக்கலான அப்டேட்டுகளுடன் அடுத்த  அப்டேட்டான பனி(Snow) மேப் வெளியானது.தற்போது PUBG அடுத்த சீசனுக்கான அப்டேட்டை வெளியிடவுள்ளது.   
 

வரப்போகும் PUBG அப்டேட்:
 

கேமர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு மாற்றங்களுடன் பட்டைய கிளப்ப 0.10.5 என்னும் புதிய அப்டேட் PUBG-யில் வெளிவர உள்ளது.அப்படி என்ன அப்டேட்ஸ்? பின்வருமாறு:

MK47 துப்பாக்கி,மேம்படுத்தப்பட்ட வீக்கெண்டி மேப்,மற்றும் புதிய வாகனங்கள்,Zombie Mode  மற்றும் புதிய குரல்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 
 

MK47 துப்பாக்கி:

7.62 மில்லிமீட்டர் புல்லட்டுகள் பயன்படுத்தப்படும் புதிய ரக துப்பாக்கியான MK47 துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வீரர்கள் ஓடிக்கொண்டே சுடுவதற்கு ஏற்றார் போல இதில் லேசர் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாகனங்கள்: 

ஆசியாவில் Tuk-Tuk எனப்படும் ஆட்டோ (Auto Rikshaw) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய குரல்கள்: 

கேம் விளையாடுபவர்கள் குயிக் சாட்டில் பேச புதிய குரல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய உணர்ச்சிகள்: 

நடனம்,நடவடிக்கை என புதிய வசதிகள் இந்த அப்டேட்டில் இடம் பெற்றுள்ளன.
 

News Counter: 
100
Loading...

youtube