சூரத் நகரில் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து - 21 பேர் உயிரிழப்பு

share on:
Classic

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள  வணிக வளாகம் ஒன்றி செயல்பட்டு வந்த பயிற்சி மையம் ஒன்றில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து வெளியே குதித்தனர். இதனால் பலர் காயமடைந்தனர். மளமளவெனப் பரவிய தீயால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சூரத் நகரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind