2100-ம் ஆண்டில் இமயமலையின் மூன்றில் ஒரு பகுதி பனிப்பாறைகள் உருகிவிடும்.. அதிர்ச்சி தகவல்...

Classic

உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், பசுமை இல்ல வாயுக்களின் அதிக உமிழ்வு, வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டிகள் இந்த நூற்றாண்டின் முடிவில் உருகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசாங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிர்ச்சி அறிக்கை:

350 ஆராய்ச்சியாளர்கள், 185 அமைப்புக்கள், 210 எழுத்தாளர்கள், 20 ரெவியூ எடிட்டர்கள் ஆகியோர் இணைந்து சுமார் 5 வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் இமயமலையில் உள்ள இந்துகுஷ் மலைகள், எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிடும் என்று குறிப்பிடப்பிட்டுள்ளது. ஒருவேளை அரசாங்கள் கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளை வியக்கத்தக்க முறையில் குறைத்து, பாரிஸ் ஒப்பந்தப் படி உலக வெப்பமயமாதலை 1.5 சதவீதம் குறைத்தாலும் கூட இந்த மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகள் உருகுவதை தவிர்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் உலக வெப்பமயமாதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் உருகும் அபாயமும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

வரலாறு காணாத காலநிலை நெருக்கடி :

இமயமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 250 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 1.65 மில்லியன் மக்கள் கங்கா, இண்டஸ்,மஞ்சல் ஆறு, மேகாங் உள்ளிட்ட மிக்பெரிய ஆறுகளை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். பனிப்பாறை உருகுவதால் இந்த நதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு மிகப்பேரழிவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த பகுதி முழுவதுமே உணவு உற்பத்தி முற்றிலும் அழிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இது ஒரு எச்சரிக்கை மணி :

1970-ஆம் ஆண்டிற்கு பிறகு பனிப்பாறை உருகுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இமயமலையை சுற்றி பல நாடுகள் உள்ளதால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, எல்லைகளை கடந்து பிராந்தியத் தலைவர்கள் காலநிலை மாற்றத்தின் விளைவால் நிகழும் பேரழிவை தடுப்பதற்காக ஒன்றாக இணைந்து செயல்பட்டு, அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அரசாங்கங்கள் மற்றும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி, இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கார்பன் வாயுக்களின் உமிழ்வை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் முக்கிய தீர்வாக உள்ளது. இதனை பற்றி உடனே விவாதிக்கவில்லை என்றால் பிரச்சனை நமக்கு தான் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

aravind