2100-ம் ஆம் ஆண்டிற்குள் கடல் பச்சை நிறமாக மாறி விடும் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

share on:
Classic

2100-ம் ஆண்டிற்குள் நீலநிறக் கடல் பச்சை நிறமாக மாறி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 2100-ம் ஆண்டிற்கு முன்பாகவே கடல்கள் பச்சை நிறமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவப்பகுதிகளில் இப்போதே கடல்கள் பச்சை நிறமாக மாறி வருவதாகவும், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டுமே தற்போது அடர்த்தியான நீல நிறத்தில் கடல்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் கடலில் காணப்படும் டைடோபிளாங்டன் - ஆல்கே என்ற தாவர நுண்ணுயிர்கள் காரணமாக கடலில் பச்சை நிறம் ஏற்படுவதாகவும், இந்த தாவரங்கள் நீல நிறத்தை கிரகித்து தங்களுடைய பச்சை வண்ணத்தை ஒளிரச் செய்யும் இடங்களில் கடல் பச்சை நிறமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பச்சை நிறம் அதிகமாக காணப்பட்டால் அங்கே வெப்பமும், கார்பன் டை ஆக்ஸைடும் அதிகமாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் நீல நிறக்கடல், பச்சை வண்ணக்கடலாக மாறிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Ramya