கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா..ராமேஸ்வரத்தில் இருந்து 2253 பக்தர்கள் பயணம்..!

share on:
Classic

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 2253 பக்தர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். 

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 80 படகுகளில் 2253 பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர். 

5000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனைவரும் படகில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev