சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: 239 பார்வைத்திறன் குறைபாடுடைய ஆசிரியர்கள் நியமனம்

share on:
Classic

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 239 பார்வைத்திறன் குறைபாடுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வைகுறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 4 ஆயிரத்து 963 பேர் பங்கேற்றதாகவும், அதில் தேர்ச்சி பெற்ற 943 பேரில் 239 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு 4 சதவீத இட ஒதுக்கீட்டை போல, பார்வை குறைபாடுடையவர்களுக்கும் ஒரு சதவீத இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிந்தவுடன், தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களே இல்லாத சூழலை அரசு உருவாக்கும் என உறுதி அளித்தார்.

News Counter: 
100
Loading...

aravind