சென்னை விமான நிலையத்தில் 24 கிலோ தங்கம் பறிமுதல்

share on:
Classic

சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனையிட்டபோது, அவர்கள் இருவரும் 24 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை கடத்தி வந்த 2 பெண்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind