275 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்

share on:
Classic

69 கோடி ரூபாய் மதிப்பில் 275 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஓட்டுநருக்கு மின் விசிறி, பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர சென்னையில் இயக்க 17 சிகப்பு நிற பேருந்துகளையும் முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

News Counter: 
100
Loading...

aravind