2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது : ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் ரத்து..!!

share on:
Classic

மக்களவைத் தேர்தலையொட்டி ஜம்மு காஷ்மீரில் இண்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த 11-ம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று 95 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகர் மற்றும் உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அங்கு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டது. ஸ்ரீ நகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது.
 

News Counter: 
100
Loading...

Ramya