2-வது டி20 போட்டி : இங்கிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி.!

share on:
Classic

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி, தொடரையும் இழந்து ஏமாற்றம் அளித்தது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2-வது டி-20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இப்போட்டியில் கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் மித்தாலி ராஜ் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வயட்டின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி-20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக அடைந்த 6-வது தோல்வி இதுவாகும். இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்து ஏமாற்றம் அளித்தது. இதன்மூலம், ஒருநாள் தொடரில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது.

News Counter: 
100
Loading...

sajeev