இன்று மத்திய அமைச்சரவையின் 2-வது கூட்டம்..!

share on:
Classic

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கடந்த 30ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த 31-ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில், 17-வது மக்களைவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17-ஆம் தேதியன்று தொடங்கும் எனவும், தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், 2-வது மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan