ஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...

share on:
Classic

கேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய துணைசபாநாயகர், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, வால்பாறை சட்டமன்ற தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் பரம்பிகுளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக பெய்யும் மழைநீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கூடுதல் தடுப்பணைகள் கட்டுதல் குறித்த கருத்துக்களுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கருத்துருக்கள் கேரள மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan