ஒரே வருடத்திற்குள் டெல்லியின் 3 முன்னாள் முதலமைச்சர்கள் மறைவு

share on:
Classic

ஒரு வருடத்திற்குள் டெல்லியின் 3 முன்னாள் முதலமைச்சர்கள் மறைந்துள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குரானா கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2004ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குரானா, உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி காலமானார். 

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சருமான ஷீலா தீட்சித் கடந்த மாதம் 20ஆம் தேதி காலமானார். உடல்நிலை பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். 1998 முதல் 2013ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீட்சித்.

டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பதவி வகித்தவர் சுஷ்மா சுவராஜ். 67 வயதான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹரியானா மாநிலத்தின் இளம் வயது அமைச்சர், இரண்டாவது பெண் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பல்வேறு சிறப்புகளை கொண்டவர் சுஷ்மா ஸ்வராஜ்.

 

News Counter: 
100
Loading...

aravind