ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து..3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

share on:
Classic

திண்டிவனத்தில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் வீட்டில் தீ பற்றியது. மளமளவென தீ பரவியதால் ராஜி, அவரது மனைவி கலா, மகன் கவுதம் ஆகியோர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

வீட்டின் மற்றொரு அறையில் இருந்த கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind