கோயிலில் உள்ள புதையலை எடுக்க 3 பேர் நரபலி..? ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

share on:
Classic

ஆந்திராவின் சித்தூரில் சிவன் கோயிலில் உள்ளதாக கூறப்படும் புதையலை எடுக்க 3 பேர் தலையை வெட்டி, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் கொத்தி கோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி அவரது சகோதரி கமலம்மா ஆகியோர் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், சிவராம் ரெட்டி, கமலம்மா மற்றும் கொத்திகோட்டா கிராமத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் ஆகியோர் அதே கோவில் முன், தலை வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். சிவலிங்கத்தின் மீதும் ரத்தம் ஊற்றப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முழுவதும் அவர்களது ரத்தம் தெளிக்கப்பட்டிருந்த‌தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனந்தபுரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் விசாரணையை தொடங்கினர். கொல்லப்பட்ட சிவராம்ரெட்டி, கமலாம்மா குடும்பத்தினருக்கு எந்த வித முன்பகையும், தகராறும் இல்லை என்று கூறிய அப்பகுதி மக்கள், நரபலி கொடுப்பதற்காகவே கொலை நடைபெற்றுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சிவன் கோவிலில், புதையல் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind