கிணற்றில் தவறி விழுந்து 3 மாணவிகள் உயிரிழப்பு..!

share on:
Classic

விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 மாணவிகள் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டியை அடுத்த கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமொழி, பவதாரணி, கௌசல்யா ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை நாளான இன்று, 3 பேரும் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த அவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், 3 பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உயிரிழந்த நிகழ்வு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth