பாலாற்றின் குறுக்கே தடுப்பணை : தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி

share on:
Classic

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை நிலை நாட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

பாலாற்றின் குறுக்கே 30 தடுப்பணைகள் கட்ட உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆந்திர அரசு அரசாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயல்வதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார். மேலும் இப்பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

News Counter: 
100
Loading...

aravind