ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் உயிரை காப்பாற்றிய 35ரூபாய் ரீ-சார்ஜ் பேக்..!!

share on:
Classic

35 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்ததன் மூலம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளதகாக ஆய்வு கூறுகிறது.

பயம் காட்டிய ஜியோ 
எப்போது ஜியோ தன வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக போன் மற்றும் இணைய சேவையை வழங்கியதோ அன்றிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவின் இலவச சேவைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் அந்நிறுவனங்களுக்கு பெரும் அடி விழுந்தது, பங்குகளும் சரிந்தன. வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய சூழலுக்கு டெலிகாம் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. ஒரு சில நிறுவனங்கள் மூட வேண்டிய சூழ்நிலைக்கும் உள்ளானது.

ஸ்மார்ட் ரீ சார்ஜ் பிளான் 
இந்நிலையில் தான் தங்களது பல திட்டங்களை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சலவை செய்ய ஆரம்பித்தன. அதன்படி முன்பு வோடபோன்  ஐடியா, ஏர்டெல் போன்ற கம்பெனிகள் வழங்கி வந்த 20, 30 ரூபாய் நிலையான ரீ சார்ஜ் பேக்குகளுக்கு பதிலாக, 35 ரூபாய் ரீ சார்ஜ் பேக்காய் அறிமுகம் செய்தது. அதேபோல் அதிக ரீ சார்ஜ் செய்ய விரும்புவர்களுக்காக  65 மற்றும் 95 ரூபாய் பேக்குகளையம் கொடுக்க ஆரம்பித்தது. 'ஸ்மார்ட் ரீ சார்ஜ் பேக்' என்று அழைக்கப்படும் இவைகள் அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது. இதன் மூலம் என்ன தான் ஜியோ விதை காட்டினாலும் நாங்கள் மாறமாட்டோம் என்று நின்ற தங்களது விசுவாசிகளை இந்த நிறுவங்களால் திருப்திப்படுத்த முடிந்தது 

அதல பாதாளத்திலிருந்து வெளியே வந்த கதை 
இந்நிலையில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களின் இந்த ஸ்மார்ட் பேக் ஆபர் தான் அதள பாதாளத்திலிருந்து அவர்களை காப்பாற்றியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இந்த பேக்குகள் மூலம் 12 சதவீதமாக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.    

நான்கு மடங்கு அதிகம் 
"மக்களுக்கு சரியான விலையின் மொபைல் சேவைகளை வழங்குவதில் இந்திய முதன்மை இடத்தில் உள்ளது. அதே போல் இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நகரங்களை போல கிராமங்களிலும் அதிகமாகி உள்ளது. ஒரு சராசரி இந்தியரின் இணைய பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் புது வாடிக்கையாளர்களும் பெருகியுள்ளனர்" என்று True Balance நிறுவனத்தின் CEO கூறியுள்ளார். 

 

News Counter: 
100
Loading...

aravind