தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 37 புதிய அறிவிப்புகள்..!

share on:
Classic

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ளார்.

சட்டபேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில், வள்ளலார் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் அம்மையார், வீரமாமுனிவர் ஆகியோர் பெயர்களில் புதிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், சி.பா ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் பரிசு என்ற விருது வழங்கப்படும் என்றும், வீரமாமுனிவர் பிறந்தநளை தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan