4வது டெஸ்ட் கிரிக்கெட் : தொடரை கைப்பற்றியது இந்திய அணி

share on:
Classic

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்களையும், இந்திய அணி 631 ரன்களையும் எடுத்தன. இதைத்தொடர்ந்து 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸுக்கான பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று தொடங்கிய 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் பேர்ஸ்டோ, வோக்ஸ், ரஷீத் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் ஆட்ட நாயகனாக கேப்டன் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Loading...

surya