பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த மாணவனுக்கு கத்திக்குத்து

share on:
Classic

சென்னை பட்டாபிராம் பெட்ரோல் பங்கில் பணிப்புரிந்த கல்லூரி மாணவனை வெட்டிய வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பட்டாபிராம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர ஊழியராக கல்லூரி மாணவர் புருசோத்தம்மன் பணிப்புரிந்து வந்தார். இருதினங்களுக்கு முன்பு வழக்கம் போல பணியில் இருந்த போது கேஸ் நிரப்ப ஒரே நேரத்தில் நான்கு ஆட்டோக்கள் வந்துள்ளன.

அப்போது முதலில் கேஸ் நிரப்ப வேண்டும் என ஒரு ஆட்டோவில் இருந்த போதை ஆசாமிகள் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த புருசோத்தம்மனை மர்ம நபர்கள் கத்தியால் சராமாரியாக தாக்கினர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டையில் பதுங்கி இருந்த சியாம், அப்பேன், கார்த்தி, சதிஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth