திமுக எம்பி பார்த்திபன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

share on:
Classic

சேலம் மாவட்ட திமுக எம்பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பெரியசாத்தப்பாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான கரடு பகுதியை திமுக எம்பி பார்த்திபன் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கரடு பகுதிக்கு அருகில் உள்ள விளை நிலங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அங்குள்ள மலையை குடைந்து கல், மண்ணை வெட்டி கடத்தி வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல லட்சம் மதிப்பிலான மரங்களையும் வெட்டி கடத்தப்படுவதை தட்டிக்கேட்டால், கொலை மிரட்டல் விடுவதாக பார்த்திபன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடத்திய மேச்சேரி காவல் ஆய்வாளர் மனோன்மணி, திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், அவரது சகோதரர் அசோக்குமார், அனந்தபத்மநாபன், காவலாளி பழனிசாமி ஆகியோர் மீது அரசு சொத்துக்களை திருடுதல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan