4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் : இன்று அதிமுக ஆலோசனை..!

share on:
Classic

4 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலையே 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan