தமிழகத்தில் நாளை 4 தொகுதிகளில் இடைத்தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

share on:
Classic

தமிழகத்தில் நாளை இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றன. சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 82 விதமான பொருட்களை அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான 257 வாக்குச்சாவடிகள் தயாராக இருப்பதாகவும், அவற்றில் 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan