எத்தியோப்பியாவில் விமான விபத்து.. இந்தியர்கள் 4 பேர் உள்பட157 பேர் உயிரிழந்த சோகம்..!

share on:
Classic

எத்தியோப்பா விமான விபத்தில் உயிரிழந்த 157 பேரில், 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் அந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. 

இதையடுத்து, அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில், விமானத்தில் 149 பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் உட்பட 157 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan