இந்திய விமானப்படைக்கு 4 புதிய ஹெலிகாப்டர்கள்..

share on:
Classic

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப் படைக்கு வழங்கிய புதிதாக 4 சினூக் ரக் ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடைந்ததன.

புதிய சினூக் ஹெலிகாட்ர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தன. தொடர்ந்து சண்டீகருக்கு கொண்ட செல்லப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் நடப்பாண்டின் இறுதியில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்படும். விமான தயாரிப்பில் முன்னணி நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் முதற்கட்டமாக 4 சினூக் ரக ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இதனால் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். மேலும் போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக மக்களை வெளியேற்றுவதற்கும், பேரிடர் காலங்களின் மீட்புப் பணிகளுக்கும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படும்.

News Counter: 
100
Loading...

Ramya