27 வினாடிகளில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்..!!

share on:
Classic

Rubik's Cube விளையாட்டில் 4 வயது சிறுவன் சக்திவேல் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

சக்திவேல் என்னும் 4 வயது சிறுவன் தன் இருகண்களையும் கட்டிக்கொண்டு 27 வினாடிகளில் 2/2 அங்கம் உடைய Rubik'Cube விளையட்டில் உலக சாதனை படைத்துள்ளார். சுட்டி தனம் நிறைந்த இந்த வயதில் உலக சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெரும்பாலும் இதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் கூட தன் இரு கண்களையும் திறந்து வைத்து கொண்டு இந்த விளையாட்டை செய்து முடிக்கவே அதிக நேரம் எடுக்கும். ஆனால், 4 வயது சிறுவன் தன் கண்களை மூடிகொண்டு வெறும் 27 வினாடிகளில் செய்து முடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளான். இதுவரை உலகில் யாரும் இந்த சாதனையை செய்ததில்லை எனவும், இவரின் இந்த புதிய சாதனை மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வகுப்பில் சுட்டித்தனமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் இந்த சிறுவனுக்கு முறையான பயிற்சி அளித்ததன் காரணமாகவே அவனால் சாதிக்க முடிந்தது எனவும், முறையான பயிற்சி என்பது சிறு வயது முதல் கிடைத்தால் நிச்சயமாக யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்கிறார் சக்திவேலின் பயிற்சி ஆசிரியர்.

சக்திவேலுக்கு இந்த திறமை இருப்பதை வகுப்பு ஆசிரியர் அவருடைய பெற்றோருக்கு கூறியதகாவும் அதன் பின் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டிலேயே செய்து கொடுத்ததாகவும், விளையாட்டு தனமாக இருந்தாலும் இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பயிற்சியை முறையாக எடுத்துக்கொண்டதாகவும் அவரது தாயார் தெரிவிக்கிறார்.

இது போன்ற சிறுவயது திறைமையாளர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என மூத்த நடிகர் ராஜேஷ் கூறுகிறார். பல்வேறு விளையாட்டுகளில் திறமையானவர்கள் தங்களின் கடும் பயிற்சியினால் இலக்கை அடைந்துள்ளதாகவும், அதேபோலத்தான் இந்த சிறுவனின் திறமையும் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

பல்வேறு துறைகளில் சாதிப்பதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து பலரும் காத்துக் கிடக்கும் வேளையில், ஆசிரியர், பெற்றோர், பயிற்சியாளர் என அனைவரின் ஒத்துழைப்போடு தனக்குள் இருக்கும் திறமையை உலகிற்கு வெளிக்கொண்டு வந்து உலக அளவில் சாதனையை படைத்துள்ளார் நமது சக்திவேல். முறையான வழிகாட்டிதலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் சாதிப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை.

News Counter: 
100
Loading...

Ragavan