400 சர்வதேச டென்னிஸ் போட்டிகளை கடந்த ரஃபேல் நடால்

share on:
Classic

மொனாக்கோவில் நடைபெற்று வரும் மாண்டிகார்லோ டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது அவருடைய 400வது சர்வதேச போட்டியாகும்.

மாண்டிகார்லோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், தென் ஆப்ரிக்க வீரர் Edmund யை எதிர்கொண்டார். இது அவருடைய 400 வது சர்வதேச போட்டி என்பதால் இதில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கினார் நடால். முதல் செட்டை 6-0 என கைப்பற்றி அசத்திய நடால், 2வது செட்டை 5க்கு7 என தவறவிட்டார். பின், 3வது செட்டில் மீண்டும் எழுச்சியடைந்த நடால் அந்த செட்டை 6க்கு 3 என கைப்பற்றி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Loading...

vijay