ரஷ்யாவில் தரையிறக்கத்தின் போது தீப்பற்றிய விமானம்.., 41 பேர் பலி..!

share on:
Classic

ரஷ்யாவில் விமான தரையிறக்கத்தின் போது தீவிபத்து ஏற்பட்டதால் 41 பேர் பலியாகினர்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ விமான நிலையத்தில் ஏரோஃப்லோட் (Aeroflot) எஸ்யூ பதிநான்கு தொண்ணூற்று இரண்டு (1492) ரக விமானம் 78 பயணிகள் உட்பட 100 பேருடன் தரையிறங்கியது. அப்போது விமானநிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு தரையிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழப்பத்துடன் தரையிறங்கிய விமானம் வழித்தடத்தில் பயணித்தபோது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ வேகமாக பரவியதால் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 40 பேர் பலியாகினர் மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விமான தீவிபத்து குறித்து மாஸ்கோ விமானநிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan