இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி

share on:
Classic

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹாமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். தவான் 13 ரன்களிலும், ரோஹித் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அறிமுகப்போட்டியில் விளையாடிய சுப்மான் கில், 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் நியூசிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 30 புள்ளி 5 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.

News Counter: 
100
Loading...

aravind