வறண்ட சருமம் பளபளக்க பளீர்னு  5 டிப்ஸ் !

share on:
Classic

சருமம் வறண்டு போவதற்கு மிக முக்கிய காரணம் உடலில் நீர் சத்து குறைவதே. தினமும் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதால் சருமம் வறட்சியில் இருந்து தப்பிக்கும். 

வெப்பநிலையும் இதற்கு மிக முக்கிய காரணம். வெயில் காலங்களில் அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொண்டே இருங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 3 முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும். 

அடிக்கடி சோப்பு போடுவதை தவிர்க்கவும். இதனால் முகம் வறட்சியில் இருந்து தப்பிக்கும். 

பாலில், சிறிது சர்க்கரை கலந்து முகத்திற்கு தடவினால் முகம் பொலிவு பெரும். பாலாடை முக வறட்சிக்கு சிறந்த தீர்வு தரும். பாலாடையில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. 

குளிப்பதற்கு முன் அல்லது குளித்த பிறகு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம்.

வாழைப்பழம் சருமத்திற்கு நல்லது. மசித்த வாழைப்பழத்துடன் பால் சேர்த்துக் கலந்து வாரம் ஒருமுறை சருமத்தில் தடவிக் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும். 

சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க தேன் பயன்படுத்தலாம். 

பட்டர் ஃப்ரூட்  (அ) அவகேடோ பழத்தை மசித்து அப்படியேவோ அல்லது அதனுடன் சிறிது தேன் கலந்தோ சருமத்தில் தடவி குளித்து வர சருமம் வறட்சியில் இருந்து தப்பிக்கும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu