'பேட்ட' படத்த ஏன் பார்க்கனும்னு கேட்கிறிங்களா..? பார்க்க இதான் காரணம்..!

share on:
Classic

பேட்ட படத்தை ஏண் பார்க்க வேண்டும்..? அப்படி என்ன இருக்கு..? இதோ காரணங்கள்..

சூப்பர் ஸ்டாரின் 2.0 இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்க, இன்று ரிலீசான பேட்ட படம் பட்டி தொட்டி எங்கும் சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் முதல் படமான பேட்ட - க்கு ஆரம்பத்திலிருந்தே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அனிருத்தின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் இன்று பேட்ட படம் கோலாகலமாக ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு படத்தை பார்த்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை நீங்கள் காட்டாயம்  பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்கள் இதோ.
 

தலைவரின் 90-களின் ஸ்டைலை பார்க்க.. 

ரஜினிகாந்த் சமீப காலமாக தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்து நடித்து வருகிறார். கபாலி, காலா போன்ற படங்கள் தலைவரை முதிர்ந்த பக்குவமான ஆளாக காட்டியது . இந்நிலையில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் பழைய அதிரடியை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது என்று  வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பேட்ட படத்தில் நீங்கள் பழைய அதாவது 90-களில் பார்த்த சூப்பர் ஸ்ட்ரை ஆசை தீர பார்த்து ரசிக்கலாம்.
 

மிரட்டியிருக்கும் வில்லன் :

2.0 வில் தலைவருக்கு எதிராக ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரின் நடிப்பும் பலத்த வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ஹிந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக் மிரட்டியுள்ளார். பல விருதுகளை தன்னிடம் வைத்துள்ள இவர் தமிழில் நடித்திருக்கும் முதல் படம் இது தான் ஆனால்  முதல் படம் என்று அவர் சொன்னால் தான் நமக்கு தெரியும் என்பது போல் கலக்கியிருக்கிறார்.
 

சிம்ரனுடன், சூப்பர் ஸ்டாரின் கெமிஸ்ட்ரி  :

90 களின் கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் 'சிம்ரன்'. அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கட்டி காத்தவர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சிம்ரனுக்கு ஏனோ ரஜினிகாந்துடன் நடிக்க மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ரிலீசாகியிருக்கும் 'பேட்ட' படத்தில்  இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கிறது என்பது 100 சதவீதம் உண்மை. 90-களில் உச்சத்தில் இருந்த இரு நடிகர்கள் ஜோடியாக நடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி :

மக்களை மத்தியில் விஜய்சேதுபதிக்கு  மரியாதை தான். அவரது நடிப்பும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் தான் இதற்கு முக்கிய காரணம். இந்த படத்தில் நவாஸுதீனுடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் வில்லனாக ஒரு காட்டு காட்டியுள்ளார். ஆனால் எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ரஜினியின் நடிப்பு எல்லாரை விட மக்களை மனதில் நிற்கிறது என்பதும் உண்மைதான். படத்தை பற்றி கூறிய விஜய்சேதுபதியும் "இது முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படம்" என்று தெளிவுப்படுத்தியுள்ளார் .
 

புதிய கதைக்களம் :

இந்த படம் வழக்கமான ஒரு ஆக்ஷன் கதைக்களமாக இல்லாமல் ஒரு மலை பிரதேசம், அதில் இருக்கும் ஒரு ஹாஸ்டெல், அந்த ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த் என்பதில் தொடங்கி அவரது உடைகள் உட்பட  எல்லாவற்றிலும் புதிய யுக்திகளை முன்னிறுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இது இந்த படத்தில் பெரிய அளவில்  ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதே போல் தேசிய விருது பெட்ரா கேமராமேன் 'திரு'வின் காட்சியமைப்பும் உங்களை அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறது.

இப்படி படத்தின் பிளஸ்கள் குவிந்துகொண்டே போக, ரசிகர்கள் முழு திருப்தியுடன் படத்தை பார்த்து செல்கின்றனர். மொத்தத்தில் இன்னும் சில வாரங்களுக்கு பேட்ட திருவிழா மட்டும் தான் .

  

 

News Counter: 
100
Loading...

aravind