அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

share on:
Classic

மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர், எம்.பிக்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்திருக்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை அதிமுக தொண்டர்கள் தொடர வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மக்களவைத் தேர்தலின் தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind