500 மற்றும் 1,000 ரூபாய்களை ஒழித்தால் கருப்பு பணத்தை ஒழித்து விட முடியாது

share on:
Classic

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் கருப்பு பணத்தை ஒழித்துவிட முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும், இதற்காக கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் சாமானிய மக்கள் பெரும் அவதிப்படுவதாகவும், கருப்பு பணத்தை மீட்க முடியாத மத்திய அரசு மக்களை தண்டிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் நான் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன். இதற்காக என்னை சிறையில் தள்ளினாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது எனவும், இந்த நோட்டுகளை புழக்கத்தில் இருந்து ஒழிப்பதால் கருப்பு பணத்தை ஒழித்துவிட முடியாது என்றும், வருகிற தேர்தல்களில் பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் மம்தா தெரிவித்தார்.

Loading...

surya