500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

share on:
Classic

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் கால அவகாசம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

இதில் பேசிய அவர், பொதுமக்களுக்கு தடையின்றி புதிய ரூபாய் தாள்களை வினியோகிக்கும் நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு தனிவரிசை ஒதுக்கப்படும் நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை வீட்டு மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களுக்காகவும், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், புதிய ரூபாய் தாள்களுக்கு ஏற்றார்போல் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்கும் பணி துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களில் போதுமான புதிய ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

Loading...

surya