500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும்

share on:
Classic

ஆதரவு :

பிரணாப் முகர்ஜி :

இன்று முதல் 500ரூபாய், 1,000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்திர பாபு நாயுடு :

புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சிந்தித்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர் பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் :

பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும், புதிய இந்தியா பிறந்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு :

மம்தா பானர்ஜி :

கருப்புப் பணத்தை மீட்பதில் தோல்வியடைந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனவும், தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மணீஷ் திவாரி :

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்தில், பிரதமரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திப்பார்கள் என கூறியுள்ளார்.

Loading...

surya