500 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு..!!

share on:
Classic

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி வீரனின் நடுகல், மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தமிழர்களின் வரலாற்று தகவல்களை ஆவணபடுத்தும் பணியில் வரலாற்றாய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், புலியைக் குத்திக் கொன்ற வீரனான புலிக்குத்தி வீரன் நடுகல்லும் மண்டபமும் கண்டறிப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அன்னக்கொடி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புலிக்குத்தி வீரனின் நடுகல் மற்றும் மண்டபம் 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan