552 கேரட் மஞ்சள்நிற வைரம்... கன்னடாவில் கண்டெடுப்பு...

share on:
Classic

கோழியின் முட்டை வடிவிலான மஞ்சள் நிற வைரம் கன்னடாவில் கண்டறியப்பட்டுள்ளது.

552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற வைரம் கன்னடாவில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வைரம் இதுவரை கனடாவில் கண்டறியப்பட்ட வைரங்களை காட்டிலும் மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் டிவைக் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட இவ்வைரம் ப்ளூம்பெர்க் கணக்கீடுகளின் படி ஏழாவது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது, மேலும் 30 பெரிய கற்களில் ஒன்று எனவும் கருதப்படுகிறது. 

இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஷேன் துர்கின் கூறியுள்ளதாவது இது நகைகள் செய்ய ஏதுவான கல் ரகத்தை சேர்ந்தது எனவும் பெரும்பாலும் உயர் தர வெண்ணிற கற்கள் ஆப்பிரிக்கா சுரங்கத்தில் கிடப்பதாகவும் தெரிவித்தார். இந்த மஞ்சள் நிற வைரம் கடினமாகவும் சுரசுரப்பான தோற்றத்தை கொண்டிருப்பினும் ஆடம்பர வைரக்கல் ரகத்திலையே தரம் பிரிக்கப்பட்டுள்ளது. சுரங்க பணிகளுக்கு மத்தியில் மிக பெரிய அளவிலான வைரக்கல் கிடைத்திருப்பது வழக்கத்திற்கு மாறானது மேலும் இது பாதுகாக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

youtube