5G அலைக்கற்றையின் ஏலம் நடக்குமா?

share on:
Classic

5G அலைக்கற்றையின் விற்பனை பொருத்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பேண்டுகளின் அடிப்படை விலை நிர்ணயிக்கப்படும் என டிராயிடம் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

5G அலைக்கற்றை ஏலத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என டிராயிடம், தொலைத்தொடர்பு துறை பரிந்துரைத்துள்ளது. சில பேண்டுகளின் அதிர்வெண்ணை அதிகரித்து அடிப்படை விலையை உயர்த்த வேண்டும் என்றும், காற்றழுத்த அளவை அதிகரிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைத்திடம் அறிவுறுத்தியுள்ள தொலைத்தொடர்பு துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது 3,400-3,425 மெகாஹெர்ட்ஸ் (MHz) அலைக்கற்றையை பயன்படுத்துகிறது. எனவே, இந்த அலைக்கற்றையை ஏலத்திற்கு உட்படுத்த முடியாது என தொலைத்தொடர்பு துறை தெளிவுபடுத்தியுள்ளது. 

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள் 2019-ம் ஆண்டு ஏலம் நடத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றன.  ஆனால், ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 5G ஏலத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், கடந்த வாரம் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, 5G அலைக்கற்றை ஏலத்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.  இந்தாண்டு 5G ரேடியோ அலைகள் 1 மெகாஹெர்ட்ஸ்-க்கு (MHz), ரூ. 492 கோடியை அடிப்படை விலையாக டிராய் பரிந்துரைத்துள்ளது. அதேபோல் 2016-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலைக்கு ரேடியோ அலைகள் விற்கப்படாததால் இந்தாண்டு அலைவரிசைகளின் அடிப்படை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் மத்திய அரசு ரூ. 65,789 கோடி ஈட்டியது. 
 

News Counter: 
100
Loading...

udhaya