நியூஸிலாந்துக்கு ஒரு நாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

share on:
Classic

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 வது ஒருநாள் போட்டி வெலிங்கடனில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தவான், ரோகித் சர்மா, சுப்மான் கில், தோனி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராயுடுவும், விஜய் சங்கரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய  ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்தார், அதனைத்தொடர்ந்து விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 45 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 49 புள்ளி 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் சேர்த்தது
 

News Counter: 
100
Loading...

aravind