தூத்துக்குடி கலவரம்: வாகனங்களுக்கு தீ வைத்ததாக 6 பேர் கைது

share on:
Classic

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக 6 பேர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி  மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே, மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Parkavi