65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Classic

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொன்மையான திரைப்பட விருதுகளான தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

தேசிய விருது இன்று தேர்வுக்குழுத் தலைவர் சேகர் கபூர் அறிவித்தார். அதன்படி, தமிழில் இன்னும் வெளிவராத திரைப்படம் “டூலெட்” சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளது.

 சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருதை நியூட்டன் படம் பெறுகிறது. 

சிறந்த நடிகைக்கான விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 சிறந்த மலையாள படமாக பதக் பாசில் நடித்த தொண்டமுத்தலும் திரிக்சாக்ஷியம் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

காற்று வெளியிடை மற்றும் மாம் படங்களுக்காக, இசைபுயல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று வெளியிடைபடத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருபாதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகுபலி 2 திரைப்படம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்காக தேசிய விருதை தட்டிச் சென்றது. 


 

பார்க்கவி
News Point One: 
65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
News Point Two: 
ஏ.ஆர். ரகுமானுக்கு 2 விருதுகள்
News Point Three: 
பாகுபலி 2 திரைப்படம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்காக தேசிய விருதை தட்டிச் சென்றது
News Counter: 
200

Parkavi