சரக்கு லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி..!!

share on:
Classic

ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில்  சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரோ - லக்னோ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. மைன்புரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 34 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் ஆக்ரா - லக்னோ சாலையில் சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth