7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..!

share on:
Classic

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொல்லா மதுரைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்தையா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 8,000 அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து சித்தையா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan