70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது - விஜயபாஸ்கர்

Classic

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, உசிலம்பட்டி தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்காக தனி அறை வேண்டும் என்றும் லேபர் வார்ட் உள்ளிட்ட வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை   மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் இருப்பதற்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்றும்  ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

News Counter: 
100

aravindh