75 - வது கோல்டன் குளோப் விருதில் அசத்திய தமிழர்

share on:
Classic

சினிமா, தொலைக்காட்சி தொடர், நகைச்சுவை இவற்றில் சிறந்தவர்களுக்காக கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படும். அதன் படி இந்த ஆண்டிற்கான 75 - வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த அஸீஸ் அன்சாரி தொலைக்காட்சி தொடரில் ( Aziz Ansari) சிறந்த நடிப்பிற்கான விருதை மாஸ்டர் ஆப் நன் (Master of None) தொடருக்காக பெற்றுக்கொண்டார். 

ஆசியாவிலேயே முதன் முறையாக அஸீஸ் அன்சாரி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இவர் ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்செஸ் மெக்டார்மண்ட் பெற்றுக்கொண்டார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் பாதிஹ் அகின் (Fatih Akin) இன் தி பெய்டு திரைப்படத்திற்காக (In the Fade) பெற்றுக்கொண்டார். 

சிறந்த இசை அல்லது காமெடிக்கான விருதை லேடி பேர்ட் திரைப்படம் வென்றது.சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை தி ஹேண்ட் மெய்ட்ஸ் டேல்( TheHandmaid'sTale ) தொடர் வென்றது.

 

News Counter: 
163
Loading...

sankaravadivu