முன்பு இல்லாத அளவு அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட 17-வது மக்களவை..!

share on:
Classic

17 ஆவது மக்களவைக்கான தேர்தலில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர். 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலில் 726 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் முன்பு இல்லாத அளவு 78 பேர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்து உள்ளனர். 16 ஆவது மக்களவையில் 61 ஆக இருந்த பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை இடைத்தேர்தல்கள் மூலம் 65 ஆக உயர்ந்தது. இதே போல் 2009 ஆம் ஆண்டில் 59 பேரும் 2004 ஆம் ஆண்டில் 45 பேரும்  குறைந்தபட்சமாக 1957 இல் 22 பெண்களும் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்திய ஸ்மிருதி இராணி, என்சிபி கட்சியின் சுப்ரியா, மேனகா காந்தி, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி ஆகியோர் முக்கிய ஆளுமையாக கருதப்படுகின்றனர். இதேபோல் கலவர வழக்கில் தண்டனை பெற்ற பிரக்யா சிங் தாகூரும் பாஜக சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் எம்பிக்கள் மகளிருக்கான இடஒதுக்கீடு, முத்தலாக் உள்ளிட்ட பிரச்சனைகளில் தங்கள் கருத்தை  நாடாளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind