நாளை மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலுக்கான 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால், நேற்று பிரசாரம் முடிவுக்கு வந்தது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரேதசத்தில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

உத்திர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், சண்டிகரில் 1 தொகுதிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

கடைசிக் கட்டத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், காங்கிரசின் சத்ருகன் சின்ஹா, நடிகர் சன்னி தியோல் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.  

மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின் போது வன்முறை ஏற்பட்ட காரணத்தால் அங்கு மட்டும் 710 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பின்னர் வரும் 23 ஆம் தேதி நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில், 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind