close
முகப்புமாவோயிஸ்டுகள் தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 8 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மறைந்திருக்கும் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி 8 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் இந்த விபத்தில் சிக்கிய 6 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்ணி வெடியை மாவோயிஸ்டுகள் தான் வெடிக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனையடுத்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.