விஷ சாராயம் அருந்தியதில் 8 பேர் பலி - உத்தரப்பிரதேசம்

share on:
Classic

விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சரன்பூரில், விஷசாராயம் அருந்திய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மது அருந்திய 8 பேர் திடீரென மயங்கி வழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth